சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியை உடைக்க சதி நடப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளன. ஒரு பக்கம் பிரச்சாரம் மறுபக்கம் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டது. திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தேர்தல் கணக்கீடுகள் ஒரு பக்கம் இருக்க, திமுக கூட்டணியை உடைக்க மற்ற கட்சிகள் முயற்சிப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந் நிலையில், திமுக கூட்டணியை உடைக்க பல சக்திகள் முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: அந்த சக்திகளின் முயற்சி ஒரு போதும் பலிக்காது. சசிகலா வருகையால் அதிமுக, அமமுகவில் மட்டுமே சலசலப்பு ஏற்படும். அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.