டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று தடுப்பூசி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
உயிரிக்கொல்லி நோயானா கொரோனவை ஒழிக்கும் வகையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இன்றுமுதல் நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.
நாடு முழுவதும சுமார் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து, இன்று காலை 11 மணி அளவில், தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார்.
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ‘இந்த தடுப்பூசியானது, நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் போடப்படும் என்றவர், ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
நமது நாட்டு, விஞ்ஞானிகள் உழைப்பால் குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது. குறைந்த நேரத்தில் தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்துகிறது என்றவர், தடுப்பூசியை கண்டுபிடிக்க பாடுபட்ட விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் என்றார்.
உலகெங்கிலும் உள்ள 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கஷ்டங்கள் இருந்தபோதிலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இது பாராசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது சோதனை உபகரணங்கள் என இருந்தாலும், மற்ற நாடுகளின் மக்களைக் காப்பாற்ற இந்தியா எல்லா முயற்சிகளையும் செய்துள்ளது:
இன்று, நாங்கள் எங்கள் சொந்த தடுப்பூசியை உருவாக்கியபோது, உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. எங்கள் தடுப்பூசி இயக்கி முன்னேறும்போது, உலகின் பிற நாடுகளும் இதன் மூலம் பயனடைகின்றன. இந்தியாவின் தடுப்பூசி மற்றும் நமது உற்பத்தி திறன் மனித நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும், இது எங்கள் உறுதி/
மேலும், ‘மனிதகுலம் ஒன்றை நினைத்து விட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியமல்ல. இந்தியாவில் தயாராகும் தடுப்புசி தான் உலகிலேயே விலை குறைவானது என்று கூறியவர், நம் நாட்டில் உருவாகும் தடுப்பூசி எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல’ இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை, இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.
மக்களுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்ட உடன் மாஸ்க்கை நீக்கி விட வேண்டாம்‘, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.