டெல்லி: அமேதியில் விரைவில் ஏகே203 துப்பாக்கி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் நரவனே தெரிவித்துள்ளார்.
ராணுவ பாதுகாப்புக்காக டிரோன் தயாரிக்கும் வகையில், சுமார் 130கோடி அளவிலான ஒப்பந்தம் பெங்களூரை தளமாக கொண்டு இயங்கும் “Idea forge” எனும் நிறுவனத்துடன் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் உற்பத்தி நிறுவனமாக “ஐடியாஃபோர்ஜ்” உருமாறி உள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலம், நவீன தாக்குதல் துப்பாக்கிகளை எவ்வாறு தயாரிப்பது என்பது இந்தியாவுக்கு முழுமையான அறிவைப் பெறும், என்றும், இது தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நமது ஆயுத தொழிற்சாலைகள் வாரியமும் ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் நிறுவனமும் இணைந்து, துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை அமேதியில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியவர், அதன்மூலம் சுமார் 6,71,427 துப்பாக்கிகள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.