புதுடெல்லி: Pfizer Inc உள்பட எந்த கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளராக இருந்தாலும், இந்தியாவில் தங்கள் மருந்துக்கான அனுமதியைப் பெறுதவற்கு, உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pfizer Inc நிறுவனம், தனது தடுப்பு மருந்து உலகின் வேறு பகுதிகளில் அங்கீகாரம் பெற்று பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தை முன்வைத்து, இந்தியாவில் தனக்கு அவசரகால அனுமதியை வழங்க வேண்டுமென கோரியிருந்தது. இதனையடுத்தே, இந்த பதிலை தெரிவித்துள்ளது மத்திய அரசு.
ஆனால், இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பு நடத்திய கூட்டங்களில் Pfizer Inc நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து, தனக்கான பயன்பாட்டு அனுமதியைப் பெறும் முன்பாக, இந்தியாவில் 1500 நபர்களுக்கும் மேலாக செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்ளானது.
அவசரகால அனுமதி தொடர்பாக இந்திய அரசு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்படி, Pfizer Inc நிறுவனத்திடம் கேட்டபோது, அங்கிருந்து உடனடியாக பதில் வரவில்லை.