சென்னை: உயதநிதியின் பெண்கள் தொடர்பான பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நான் பெண்கள் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. யாராவது மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சட்டத் துறை சார்பில் மாநாடு மற்றும் சட்டக் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் நான் பல்வேறு பொய்யான அவதூறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன். சட்டதுறை என்னை காப்பாற்றும் என நம்பி தான் நான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன் என்று கூறியவர், தான் பேசிய தகவல்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும, பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. ஆனால், தனது பேச்சால் பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை என கூறினார்.