டில்லி
கொரோனா தடுப்பூசி போடுவதற்காகப் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுமார் 19.34 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது,
இந்தப்பணி வரும் ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வருடம் தோறும் வழக்கமாக நடை பெறும் பச்சிளம் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகம் ஜனவரி 17 நடைபெற இருந்தன,
தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக நாடெங்கும் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைத்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.