டேராடூன்: உத்தரகாண்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  நிலநடுக்கதால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

உத்தரகாண்டில் அண்மைக்காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி ஹரித்துவாரில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து ஹரித்துவாரில் அன்று தான் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.