பெர்லின்

ஜெர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்க ஜனவரி இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது.  இதில் குறிப்பாக ஜெர்மனியில் இரண்டாம் அலை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது முதல் அலையை விட அதிகமாக உள்ளது.  தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆகவே ஜெர்மனி அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.  அதையொட்டி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் நாடாளவிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய முழு ஊரடங்கு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

 ஆயினும் 25021 புத்தாண்டு பிறந்த பிறகும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தபடி உள்ளன   இதையொட்டி கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி இறுதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.