கொல்கத்தா: மேற்கு வங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந் நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு அனுப்பி உள்ளார்.
சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் வெளியாகவில்லை. ஆனாலும், திரிணமூல் கட்சியில் நீடிப்பார் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel