டெல்லி: 831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா, பான் மசாலா நிறுவனத்தில் மத்திய ஜிஎஸ்டி மேற்கு ஆணையரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு புகையிலை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பதிவு செய்யப்படாத அந் நிறுவனத்தில் 65 பேர் ஊழியர்களாக இருந்திருக்கின்றனர். சோதனையின் முடிவில் 4.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
831.72 கோடி அளவுக்கு இந்நிறுவனம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.