உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான கோவாவில் கஞ்சா செடியை வளர்க்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
“மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சா செடிகளை வளர்க்க சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது” என கோவா மாநில சட்ட அமைச்சர் நிலேஷ் காபரேல் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பட்டியலில் உள்ள வஸ்துகளில் இருந்து கஞ்சா நீக்கப்படுவதாக அமைச்சர் நிலேஷ் மேலும் கூறினார். மாநில அரசின் இந்த முடிவுக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“பா.ஜ.க.அரசு எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து கீழிறங்கும் என்பதற்கு இது உதாரணம்” என கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
“போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு பா.ஜ.க. ஆதரவாக உள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
– பா. பாரதி