லக்னோ :
உத்தரபிரதேச மாநிலம் பாடூன் மாவட்டத்தில் உள்ள கரியாமை கிராமத்தில் உள்ள சலூனுக்கு அந்த ஊரை சேர்ந்த தலித் இளைஞர் முடிவெட்டுவதற்காக சென்றுள்ளார்.
ஆனால் சலூன் கடைக்காரர், “தலித் வகுப்பை சேர்ந்த உனக்கு முடி வெட்ட முடியாது” என அந்த இளைஞரை விரட்டி அடித்துள்ளார்.
“நான் எனது சலூன் கடையை மூடினாலும் மூடுவேனே தவிர உனக்கு முடி வெட்ட மாட்டேன்” என கூறியுள்ளார்.
இந்த காட்சியை அந்த கிராமத்தை சேர்ந்த பப்லு என்ற இளைஞர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
பட்டதாரியான பப்லு, டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தலித் சிறுவனுக்கு, ‘பார்பர்’ முடிவெட்ட மறுக்கும் ஆடியோ மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பப்லு பதிவிட்டதால், அது வைரலானது.
இதையடுத்து அந்த சலூன் கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த கிராமத்துக்கு சென்று போலீசார் விசாரித்த போது, “கிராமத்தில் உள்ள தலித்களுக்கு சலூன் கடைக்காரர் முடி வெட்டுவதில்லை” என ஊரார் புகார் அளித்தனர்.
தலைமறைவான, சலூன் கடைக்காரரை போலீசார், தேடி வருகிறார்கள்.
– பா. பாரதி