
நியூயார்க்:
சில வகையான மன நோய்க்கும், இரண்டாவது வகை சர்க்கரை நோய்க்கும் மரபணு தொடர்பு இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மன சிதைவு, இரு முனை கோளாறு மற்றும் சில மன அழுத்தம் போன்ற மன நல பாதிப்புப்புகள் ஏற்பட ‘டிஸ்க் 1’’ என்ற மரபணு முக்கிய பங்காற்றுகிறது. அமெரிக்காவின் மாஸாகுசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தள்ளனர்.
அமெரிக்காவின் மாஸாகுசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘டிஸ்க் 1’’ என்ற மரபணுவை எலிக்கு செலுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர். மற்றொரு எலிக்கு இந்த அணுவை செலுத்தாமல் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
மரபணு செலுத்தப்பட்ட எலியின், உடலில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க தேவையான இன்சுலினை கணையத்தில் இருந்து உற்பத்தி செய்யும் பேட்டா செல்களை இந்த மரபணு அழிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு எலி சாதாரணமாகவே இருந்தது. இதனால் மனநோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் இடையே மரபணு தொடர்பு இருப்புது தெரியவந்துள்ளது.
இது சரி செய்யக் கூடியது என்றாலும், செலவு அதிகமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel