டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,45,326 ஆக உயர்ந்து 1,48,475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 20,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,02,45,326 ஆகி உள்ளது.  நேற்று 285 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,48,475 ஆகி உள்ளது.  நேற்று 26,572 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,33,339 ஆகி உள்ளது.  தற்போது 2,60,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,018 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,25,066 ஆகி உள்ளது  நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,373 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,572 பேர் குணமடைந்து மொத்தம் 18,20,021 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 54,537 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 662 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,17,571 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,344 பேர் குணமடைந்து மொத்தம் 8,93,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 326 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,81,599 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,100 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 364 பேர் குணமடைந்து மொத்தம் 8,71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,383 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 957 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,16,132 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,065 பேர் குணமடைந்து மொத்தம் 7,95,293 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,747  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,887 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,49,451 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,015 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,029 பேர் குணமடைந்து மொத்தம் 6,81,397 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.