எம்.அஸ்வின்
எம்.அஸ்வின்

டெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் தமிழக வீரரான எம்.அஸ்வின் அதிகபட்சமாக ரூ. 4.5 கோடிக்கு ஏலம் போனார். இவரது ஆரம்ப விலை ரூ. 10 லட்சம். இதில் இருந்து 45 மடங்கு அதிக விலை கொடுத்து புனே சூப்பர் ஜெயின்ட் அணி இவரை ஏலம் எடுத்துள்ளது.
25 வயதாகும் சென்னையை சேர்ந்த இவர் லெக் ஸ்பின்னர் ஸ்பெஷலிஸ்ட். இவரது ஆரம்ப கால கிரிக்கெட் வரலாறு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் இவர் விளையாடிய போது ஒரு விக்கெட் எடுத்து 246 ரன்கள் கொடுத்தார். அடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி 69 ரன்கள் கொடுத்தார். இருந்தும் இவர் இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போனதற்கு காரணம் இருக்கிறது.
கடந்த ஜனவரியில் நடந்த சையது முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் இவர் ஆடிய 6வது போட்டியில் 23 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதாவது ஒவ்வொரு 14 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியது தான் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
சென்னை சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் பயின்றவர் அஸ்வின். இவரது தந்தை தமிழ் திரைப்பட வசன கர்த்தாவான இரா.முருகன். அஜித் நடித்த பில்லா 2 திரைப்படத்தின் வசனகர்த்தா இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் இருக்கையில், தற்போது மற்றொரு லெக் ஸ்பின்னர் அஸ்வினும் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.