ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் முலம் நமக்கு கிடைத்தது என்ன என்பது குறித்து இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தொடர்ந்து அது வெற்றிகரமாக ச புவி வட்டப்பாதையில் இருந்த நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட்டது.
அதையடுதது, செப்டம்பர் 2ம் தேதி அது விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து பிரியும் நிகழ்வு என்றும், அப்போது, விண்கலத்திலிருந்து, லேண்டர் சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்படும். செப்டம்பர் 3 ம் தேதி, லேண்டரின் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதிசெய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய ஆபரேஷன் செய்வோம். அதையடுத்தே செப். 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
ஆனால், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தொடர்பை இழந்தது. பின்னர், அது எதிர்பாராதவிதமாக அங்குள்ள பொருளில் மோதி விழுந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து இயங்கியது.
அப்போது ஏராளமான நிலவின் சுற்றுப்பாதையில் பல படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பியுள்ளது. குறிப்பாக துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
சுமார் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் தகவலுக்கு இணையதளங்களை பார்க்கலாம்….
https://www.issdc.gov.in/
https://pradan.issdc.gov.in/pradan/
https://twitter.com/isro