டெல்லி: உலக நாடுகளை மீண்டும் பீதிக்குளாக்கி வரும் புதியவகை கொரோனா தொற்று எந்த நாட்டில் இருந்து பரவியது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய விமானப்பயணிகளில் 22 பேருக்கு தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இந்த புதிய வகை தொற்று இங்கிலாந்தில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. ஆனால், இது ஆப்பிரிக்காவில் இருந்து பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக உலக பொருளாதாரத்தையேப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது புதிய பரிணாமத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்நாட்டுடனான விமான சேவைகளை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில், கொரோனா தொற்றின் இந்த புதிய வடிவம் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மரபியல் மாற்றம் பெற்றுள்ளது. இந்த வகை மிக ஆபத்தானது என்று தற்போது சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்துகள் இதற்கு எதிராக செயலாற்றும் என்றே கூறலாம்” என்று ஆய்வாளர் ஜேம்ஸ் கலேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இருந்தாலும், இந்தியாவுக்கு இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிரிட்டனில் ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களில் 60 சத வீதம் பேர் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பிரிட்டனில் தீவிரமாக பரவி வரும் புதிய வகை வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் வைரஸின் தன்மையைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். இதனால் இந்த புதிய வைரஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகள் மூலம் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரிட்டனில் கொ ரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண் ணிக்கை 36,804 ஆக அதிகரித்துள்ளது. இது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில்கூட ஒரேநாளில் இந்த அள வுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், புதிய கரோனா வைரஸை மாடர்னா தடுப்பூசி எதிர்க்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. புதிய கரோனா வைரஸ் வடிவமைப்பு அதன் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் புதிய தொற்றுக்கு ஆளாகிறார்களா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.