ரியாத்: துபாயில் ஃபைசர்-பயோஎன்டெக்  நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ள நிலையில், இதுதொடர்பான பிரசாரம் இன்று தொடங்கி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.  பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில்,  ஃபைசர் மற்றும் பயோன்டெக்  நிறுவன  தடுப்பூசி நோயைத் தடுப்பதில் 95% பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  ஃபைசர்  பயோஎன்டெக்  நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இலவசமாக நாட்டு மக்களுக்கு வழங்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பா பிரச்சாரத்தை  துபாய் இன்று தொடங்குவதாக நகர ஊடக அலுவலகம் டிவீட் செய்தது.

அதைத்தொடர்ந்து,  ஃபைசர்-பயோஎன்டெக்கின் தடுப்பூசியைப் பயன்படுத்துமாறும், அது பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பது குறித்த பிசாரத்தை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனாவின் அரசு ஆதரவுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசி 86 சதவிகிதம் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.