
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.47 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.5 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது,இந்த படத்தின் தெலுங்கு டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,
[youtube-feed feed=1]