
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அறந்தாங்கி நிஷா “நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன். ஆனால் இன்று நானே காயப்பட்டு இருக்கிறேன்” என்பது போல ஒரு பதிவிட்டிருந்தார்.
அதே போல் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, பின்பு தன்னிடம் பிடித்த குணங்கள் மற்றும் தான் சிறிது மாற்றிக்கொள்ள வேண்டியது பற்றி பெஸ்ட் பதில் தருவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து. “இன்னும் கொஞ்சம் பேச வேண்டும், சேர்க்கை சரி இல்லை” போன்ற சிலவற்றையும் மாற்றி கொள்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CI2_S1TBAoC/
[youtube-feed feed=1]