கோவை: ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனையில்,  ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரோடு பகுதியில் பிரபலமானது ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கட்டுமான  நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில்  உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக,  ஸ்ரீனிவாசன், சேகர் மற்றும் பூபதி ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம், அரசின் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறது. ஏராளமான அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவை, சேலம், ஈரோடு, மதுரை  பகுதிகளிலும் கிளைகளை நிறுவியுள்ளது.

அதுமட்டுமின்றி, கல்குவாரி தொழில், திருமணமண்டபம், டிராவல்ஸ், பேருந்து சேவை, மசாலா பொருட்கள் தயாரிப்பு என தொழில்களையும் நடத்தி வருகிறது.  இந்நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்துவருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், ஸ்ரீபதி நிறுவனத்துக்கு செர்ந்தமான 50 இடங்களில், ஒரே நேரத்தில்   கடந்த 14ந்தேதி திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை 4 நாட்களாக நீடித்த நிலையில், இன்றுதான் முடிவுக்கு வந்துள்ளது.  ரெயின் 2வதுநாளில் ரூ.16 கோடியும், 3வது நாளில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.  தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதன் மதிப்பு ரூ.700 கோடி என்பது தெரிய வந்துள்ளது. அந்த  ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]