ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம், உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கை கோளான, சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்சி-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இன்று மாலை சரியாக 3.41 மணிக்கு சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டது. முன்னதாக ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேரம் கவுண்ட் டவுன் நேற்று மாலை தொடங்கப்பட்டது.
இந்தியா சார்பில், தகவல் தொடர்பு சேவைகளின் வசதிக்காக இதுவரை 41 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது, அதிநவீன சிஎம்எஸ் – 01 செயற்கை கோளை இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தி உள்ளது.