சென்னை: தமிழகத்தில், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஏன் தமிழில் வெளியிடப்படுவது இல்லை என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், தமிழகஅரசின் அரசாணைகள், உத்தரவுகள் தாய்மொழியான தமிழில் பிறப்பிக்கப்படுவதில்லை என்றும், தொன்மையான தமிழ் மொழி அதிகாரிகளால் புறக்கணிப்பு செய்யப்படுவதாகவும், எனவே, தமிழிலியே அரசாணைகள் வெளியிட உத்தரவிடக் கோரி மனுதாரர் கொருக்குப்பேட்டை பழனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, புகார் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இந்த மனுவுக்கு வரும் மார்ச் 29 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ன மகுற்றசாட்டியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.