காதலைக் கூற பூக்களைக் காட்டிலும் ஒரு பெரிய தூதுவன் உண்டோ? அன்பு, ஆசை, காதல் போன்ற உணர்வுகளை அழகிய பூக்களைக் கொண்டு சொல்லலாம், அதிலும் குறிப்பாக வண்ண வண்ண ரோஜாக்களைக் கொண்டு.
ஒவ்வொரு நிற ரோஜா பூவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது:
- பல நாள் காதலைக் கூற வேண்டுமா, கண்டிப்பாக நீங்கள் கொடுக்க வேண்டியது சிவப்பு நிற ரோஜாக்களே.
- நட்புக்கு, மஞ்சள் நிற ரோஜாக்கள்.
- ஆரெஞ்சு நிற ரோஜாக்களை நெருங்கிய நட்பிற்கு கொடுங்கள்; காதலாக இருந்தால் இதனுடன் சில சிவப்பு நிற ரோஜாக்களையும் சேர்த்துக் கொடுத்து உறுதிபடுத்திவிடுங்கள்.
- பிங்கு நிற ரோஜா, பெறுபவர் மிகவும் கருணை கொண்டவரென்று குறிப்பிடும். உங்களுடைய மகிழ்ச்சி மற்றும் நன்றியையும் இந்த நிற பூக்களைக் கொடுத்து சொல்லலாம்.
- வெள்ளை நிற ரோஜாக்கள், அதன் தூய்மையைகாக, இன்று மலர்ந்த காதலுக்கு, அல்லது இரங்கலுக்கு கொடுக்கலாம். ஆகையால் மிகவும் சிந்தித்து இந்த நிற ரோஜாக்களைக் கொடுங்கள். பெறுபவருக்கு இந்த நிற பூ பிடித்திருந்தால், பிழைத்தீர்கள். இல்லையேல்…மலர்ந்தும் மலராத காதலாகிவிடும் உங்கள் காதல்…ஜாக்கிரதை.