புதுடெல்லி: கொரோனா காரணமாக, இந்தியர்களில் 46% பேர், மருத்துவமனைக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் முறையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலை இன்னும் நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, சென்னை, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், 20 முதல் 85 வயது வரையிலான ஆட்கள் இந்த ஆய்வுக்காக கணக்கில் எடுக்கப்பட்டனர். இந்த ஆய்வில் மொத்தமாக கலந்துகொண்டவர்கள் 2406 பேர். அவர்களுள் ஆண்களின் எண்ணிக்கை 1455 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 951.
ஆன்லைன் ஆலோசனையைப் பெற்ற நோயாளிகளில் 70% பேர், சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், புற்று நோய், சிறுநீரக நோய்கள் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தங்களுக்கான ஆபத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பாமல், இந்த முடிவை மேற்கொண்டதாக தெரியவருகிறது.