மாஸ்கோ: ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த பலி எண்ணிக்கையை தொடர்ந்து, ஜெர்மனி நாட்டின் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 23,427 ஆக அதிகரித் உள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது.
புதியதாக 27,728 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,79,238 ஆக உயர்ந்து உள்ளது.
பாதிப்பு, மற்றும் பலி எண்ணிக்கை உயர்வு காரணமாக அங்கு இன்று முதல் ஜனவரி 10ம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது.