டெல்லி: வாட்ஸ் அப் பே (Whats App Pay) இப்போது எஸ்பிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் செயலாக்கத்தை துவக்கி உள்ளது.
2016ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரிதுள்ளன. வாட்ஸ் அப்பிலும் இத்தகைய பணப்பரிவர்த்தனை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், வாட்ஸ் அப் பே (What’s App Pay) இந்திய வாடிக்கையாளர்களுக்காக எஸ்பிஐ, எப்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளுடன் தமது செயல்பாடுகளை துவக்கி இருக்கிறது.
இது குறித்து இந்தியாவின் வாட்ஸ் அப் நிறுவன தலைவர் அபிஜித் போஸ் கூறி இருப்பதாவது: இதற்கு முன்பு, இந்த வசதிகளை பயன்படுத்த முடியாமல் இருந்த பயனாளர்களுக்கு இப்போது வாய்ப்புகளை வழங்கி உள்ளோம் என்றார்.
இப்படி அனுப்பப்படும் கட்டண முறையானது ஒரு செய்தியை அனுப்புவது போன்றே பணத்தையும் அனுப்புவதையும் எளிதாக்குகிறது. பணத்தை பாதுகாப்பாக வேண்டியவர்களுக்கு அனுப்பலாம். நேரில் பணத்தை பரிமாறிக் கொள்ள வேண்டியது இல்லை என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.