லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக விரோதிகளால் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.

அம்மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பிம்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோஹ்தா பச்தரா கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை சமூக விரோதிகள் சிலர் இழிவுபடுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த கிராமத்தில் பதற்றம் நிலவியது. சிலை அவமதிக்கபட்ட சம்பவம் குறித்து மக்கள் தங்களுக்கு தகவல் கூறியதாக பிம்புரா காவல் நிலைய அதிகாரி ஷிவ் மிலான் கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது, விரைவில் அங்கு புதிய சிலை நிறுவப்படும் என்று வட்ட காவல்துறை அதிகாரி கே.பி.சிங் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel