
டோக்கியோ: அடுத்த 2021ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை ஜப்பானில் நடத்துவதற்கு, அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது சர்வேயில் தெரியவந்துள்ளது.
இந்த 2020ம் ஆண்டில், ஜப்பானில் நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக, 2021ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, உலகின் பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வரத்துவங்கியுள்ளன.
இந்நிலையில், ஜப்பானில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்கை, திட்டமிட்டபடி வரும் 2021ம் ஆண்டில் நடத்தாலாமா? என்று அந்நாட்டில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்துகொண்டவர்களில் வெறும் 27% மக்களே ஒலிம்பிக்கை 2021ம் ஆண்டில் நடத்தலாம் என்று தெரிவித்தனர். 32% பேர் போட்டியையே ரத்துசெய்ய வேண்டுமென்று கருத்து தெரிவித்தனர்.
அதேசமயம், 31% போட்டியை இன்னும் சில காலத்திற்கு ஒத்திவைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தனர். மீதிபேர், கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.