
மும்பை: இந்தமுறை ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித், வார்னர் மற்றும் மார்னஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளதால், இந்திய அணி கவனமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
அவர் கூறியுள்ளதாவது, “சீனியர் வீரர்கள் எப்போது ஒரு அணியில் இல்லையோ, அப்போது, திடீரென ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாய் தோன்றும். அதுதான், கடந்த 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கும் நேர்ந்தது.
ஆனால், தற்போது 3 முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், அந்த அணியின் பலம் அதிகரித்துள்ளது. இதனால், இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையலாம்.
அதற்காக, எல்லா தொடர்களையுமே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தனித்தனியாக பார்ப்பதே பொருந்தும். தற்போதைய இந்திய பவுலிங், பலமானது என்பதுதான் உண்மையே.
எனவே, எந்த ஆடுகளம் என்பதெல்லாம் பொருட்டல்ல. வெரைட்டியான பவுலர்கள் நம்மிடம் உள்ளதால், இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடலாம்” என்றுள்ளார் சச்சின்.
[youtube-feed feed=1]