
அடிலெய்டு: பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பியிருப்பது, ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்றுள்ளார் சக பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்.
மிட்செல் ஸ்டார்க், இதுவரை தான் ஆடியுள்ள 7 பகலிரவு போட்டியில், மொத்தம் 42 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அவரின் சராசரி 19.23. எனவே, அடியெல்டில், இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இவர் பங்கேற்பது கூடுதல் பலம் என்றுள்ளார் ஹேசில்வுட்.
“எங்கள் பந்துவீச்சு தாக்குதலில் ஸ்டார்க் முக்கியப் பங்கு வகிப்பார். அவர், பிங்க் பந்தில் எத்தனை விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் இருகரங்களை விரித்து, அவரை அணிக்கு மீண்டும் வரவேற்கிறோம்” என்றுள்ளார் ஹேசில்வுட்.
முதலாவது டி-20 போட்டியோடு, தனது குடும்பத்தில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக மிட்செல் ஸ்டார்க் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் அணிக்குத் திரும்புகிறார் அவர்.
[youtube-feed feed=1]