
மிலன்: ஃபிஃபா வழங்கும் சிறந்த கால்பந்து வீரருக்கான வருடாந்திர விருதுக்கான இறுதிப் பட்டியலில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ உள்ளிட்ட 3 வீரர்கள் மோதுகின்றனர்.
கொரோனாவை முன்னிட்டு, இந்தாண்டு இதற்கான நிகழ்ச்சி ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. இறுதிப் பட்டியலில், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடும் அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி, யுவன்ட்ஸ் கிளப் அணிக்காக விளையாடும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பேயர்ன் முனிக் கிளப் அணிக்காக விளையாடும் போலந்தின் லெவன்டோவ்ஸ்கி ஆகியோர் உள்ளனர்.
இறுதியில், தேர்வாகும் வீரருக்கு, டிசம்பர் 17ம் தேதி விருது வழங்கப்படும். இந்த விருதை இதுவரை மெஸ்ஸி 6 முறையும், ரொனால்டோ 5 முறையும் வென்றுள்ளனர்.
ஃபிஃபாவுடன், பிரான்ஸ் கால்பந்து சங்கமும் இணைந்து இவ்விருதை வழங்கிவந்தது. ஆனால், கடந்த 2016 முதல், இவ்விருதை ஃபிஃபா அமைப்பு மட்டுமே தனியாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]