சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடியும்வரை, தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்குமாறு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுரை பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, தமிழக வீரர் நடராஜனுக்கு டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கும் இதே நிலைதான்.

டி-20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்ததும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சாஹல் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் நாடு திரும்பிவிட்டனர். ஆனால், மேற்கண்ட மூவரும் அங்கேயே தங்கியிருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

ஏனெனில், டெஸ்ட் போட்டியின்போது, பந்துவீச்சாளர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், இவர்களில் யாரையேனும் பயன்படுத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]