
மாஸ்கோ: சர்வதேச குத்துச்சண்டை அசோசியேஷன்(ஏஐபிஏ) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரஷ்யாவின் உமர் கிரெம்லேவ்.
இதற்காக வாக்கெடுப்பில் மொத்தம் 155 தேசிய பெடரேஷன்கள் கலந்துகொண்டன. அப்போட்டியின் முடிவில், மொத்தம் 57.33% வாக்குகளைப் பெற்று வென்றார் கிரெம்லேவ்.
இந்த அமைப்பு, சில முறைகேட்டுப் புகார்களின் காரணமாக, கடந்தாண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தடைசெய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, உமர் கிரெம்லேவ் கூறியிருப்பதாவது, “குத்துச்சண்டை என்பது சண்டை வீரர்களின் விளையாட்டு. இன்றைய நிலையில், நமது சண்டையானது நிதிக் கடன், திறனின்மை, ஊழல், ஊக்க மருந்து, மோசமான பயிற்சி மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றுக்கு எதிராக இருக்க வேண்டியுள்ளது.
தலைவர் என்ற முறையில், எனது பதவி காலத்தில், இந்தக் குறைகளை சரிசெய்து, அமைப்பை வலுப்படுத்துவதே நோக்கம்” என்றுள்ளார் உமர்.
[youtube-feed feed=1]