வாஷிங்டன்
சர்வதேச பத்திரிகையாளர் குழு வெளியிட்டுள்ள மிகவும் பயங்கரமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் முதல் 4 இடங்களுக்குள் உள்ளது.,
பாகிஸ்தானில் பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதிலும் பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை மிகவும் அதிகமாக உள்ளதாகப் பல அமைப்புக்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்த வருடத் தொடக்கத்தில் ஃபிரிடம் நெட் ஒர்க் அமைப்பு கடந்த 20 வருடங்களில் 140க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
தற்போது நடந்த சர்வதேச பத்திரிகையாளர் குழுவின் சம்மேளனத்தில் அதிக அளவில் பயங்கரமான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ”கடந்த 1990 முதல் 2020 வரை 2658 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஈராக் நாட்டில் 340 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்ததாக மெக்சிகோவில் மற்றும் பிலிப்பன்ஸில் தலா 178 பேர், பாகிஸ்தானில் 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
2020 ஆம் வருடத்தில் மட்டும் 15 நாடுகளில் 42 பத்திரிகையாளர்கள், தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வருட பட்டியலின்படி மெக்சிகோ முதல் இடத்திலும் பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.. ஆசிய பசிபிக் பகுதியில் நடந்த பத்திரிகையாளர் கொலைகளில் பாகிஸ்தானில் மட்டும் 40% நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.