சென்னை

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தம்மை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி  இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  அவரை சமீபத்தில் பிரசாத்  ஸ்டூடியோ நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி உள்ளது.   மேலும் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து இளையராஜா சென்ன உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்    சுமார் 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் இசையமைத்து வந்த தன்னை வெறியேற்றிவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தமக்கு இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி உள்ளார்.

மேலும் அந்த மனுவில், ஸ்டூடியோவிலிருந்த, தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இளையராஜாவின் மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனு தொடர்பாக டிசம்பர் 17ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.