
அகமதாபாத்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பார்த்தீவ் படேல், ஐபிஎல் மும்பை அணியின் திறன் கண்டறியும் பிரிவுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர், தற்போது முடிவடைந்த ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியில் பணிபுரிந்தார்.
கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார் பார்த்தீவ் படேல். அதன்பிறகு, இவர் பெரியளவில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
பின்னர், ஐபிஎல் தொடங்கிய பின்னர், மும்பை அணியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில், மும்பை அணி பட்டம் வென்றபோது, அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.
தற்போது, மீண்டும் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார். திறன்வாய்ந்த வீரர்களைக் கண்டறிந்து, அவர்களை அணிக்காக தயார்படுத்தும் பணிகளை இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் வீரர்களுக்கு, ஐபிஎல் என்பது பணம் காய்க்கும் மரமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]