புதுடெல்லி:
நாடு முழுவதும் மகாகவி பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் கான் மார்கெட் பகுதியில் உள்ள பாரதியார் சிலையில் உள்ளது காணாமல் போகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

“வீழ்வேன் என்று நினைத்தாயோ” என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி பாரதிக்கு இன்று 139-வது பிறந்த நாள். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகாகவியின் சாதனைகளும் கவிதை படைப்புகளும் உலகம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் கான் மார்கெட் பகுதியில் உள்ள பாரதியார் சிலைக்கு பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே.வாசன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் இவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாரதி சிலையில் வழக்கமாக இருக்கும் அவரது கைத்தடி இன்று காலை நடைபெற்ற விழாவின் போது இல்லாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே பாரதியின் கையில் கைத்தடி இல்லை எனவும், யாராவது திருடியிருக்களாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக டெல்லி காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி. பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர் என்பது குறிப்பிடதக்கது.