
மெல்போர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதவுள்ள மெல்போர்னில் நடைபெறும் ‘பாக்சிங் டே’ போட்டியைக் காண, 30000 ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு அணிகள் மோதும், இரண்டாவது டெஸ்ட் போட்டிதான் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட். இப்போட்டி, டிசம்பர் 26 முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது.
இப்பகுதியில், கடந்த 40 நாட்களாக புதிய கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், அப்போட்டியைக் காண, தினமும் 30000 ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெல்போர்ன் மைதானத்தில் கூடுதல் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து, கிரிக்கெட் உலகில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]