
வெலிங்டன்: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து அணி.
டாஸ் வென்ற விண்டீஸ் அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில், துவக்கம் சரியாக அமையவில்லை. மூன்றாவது வீரர் வில் யங் 43 ரன்களை அடித்தார்.
இப்போட்டியில், கேப்டனாக செயல்பட்ட டாம் லாதம் 27 ரன்களே அடித்தார். ராஸ் டெய்லர் 9 ரன்களுக்கு அவுட்டானார். ஆனால், ஹென்றி நிக்கோலஸ் 117 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருக்கிறார்.
பிஜே வாட்லிங் 30 ரன்களை அடிக்க, மிட்செல் 42 ரன்களை எடுத்தார். இதனிடையே ஆட்டநேர முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை அடித்துள்ளது நியூசிலாந்து அணி.
விண்டீஸ் தரப்பில் ஷனோன் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும், செமார் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
[youtube-feed feed=1]