பனாஜி: மும்பையிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றதன்மூலம், ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்தில், தனது இரண்டாவது தோல்வியைப் பெற்றுள்ளது சென்னை அணி.

போட்டியின் 40வது நிமிடத்தில், சென்னையின் சில்வெஸ்டர் ஒரு கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று கொடுத்தார்.

அதேசமயம், 45வது நிமிடத்தில், மும்பை அணி பதிலுக்கு ஒரு கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. அதேசமயம், இரண்டாவது பாதியின் 75வது நிமிடத்தில், மும்பை அணியின் லீ பான்ட்ரே ஒரு கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.

ஆனால், இதற்கு பதிலடி கொடுக்க, சென்னை வீரர்களால் கடைசிவரை முடியவில்லை. எனவே, இறுதியில், மும்பை அணி 2-1 என்ற கணக்கில் மும்பை வெல்ல, சென்னை தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

 

 

[youtube-feed feed=1]