டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,62,326 ஆக உயர்ந்து 1,41,735 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 26,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 97,62,326 ஆகி உள்ளது.  நேற்று 337 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,41,735 ஆகி உள்ளது.  நேற்று 29,605 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 92,44,505 ஆகி உள்ளது.  தற்போது 3,77,662 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,981 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,64,348 ஆகி உள்ளது  நேற்று 75 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,902 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,111 பேர் குணமடைந்து மொத்தம் 17,42,191 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 73,166 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 618 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,73,457 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,045 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 785 பேர் குணமடைந்து மொத்தம் 8,61,153 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,259 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,232 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,94,020 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,836 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,316 பேர் குணமடைந்து மொத்தம் 7,71,693 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,491 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,49,572 ஆகி உள்ளது  இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,508 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,647 பேர் குணமடைந்து மொத்தம் 5,86,998 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.