பாரிஸ்: மேற்கு நாடுகளில், இளைஞர்கள் சாலையில் ஆடும் ஹிப்ஹாப் எனப்படும் பிரேக் டான்ஸிங் நடனம், ஒலிம்பிக் அந்தஸ்து பெற்றுள்ளதால், 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் அது சேர்க்கப்படவுள்ளது.
இதுதவிர, ஸ்கேட் போர்டிங் எனப்படும் பலகையில சறுக்குதல், ஸ்போர்ட் கிளைம்பிங் எனப்படும் மலையேற்றம், சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளும், பாரிஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், பாரிஸ் ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பொதுவாக 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், பளு தூக்குதலில் பங்கேற்ற போட்டியாளர்களில் பாதியளவு போட்டியிட வேண்டும்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் 120 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் போட்டியைக் கைவிடலாம். அதுமட்டுமல்லாமல், பளு தூக்குதல் வீரர்களுக்கு இடையே ஊக்கமருந்து விவகாரமும் தீவிரமாக இருந்து வருவதால் அந்தப் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
அலைச்சறுக்கு விளையாட்டு பசிபிக் பெருங்கடலில் தஹிதி கடற்கரையில் 15 ஆயிரம் கி.மீ.க்கு மேல் நடத்தவும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சம்மதித்துள்ளது.