டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான, விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்து உள்ளார்.

பார்திவ் பட்டேல்

இந்திய அணியில் 17 வயதிலேயே அறிமுகம் ஆனவர் பார்த்திவ் பட்டேல். சிறந்த விக்கெட் கீப்பரான அவரால், பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால், பல்வேறு போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் மறுத்து வந்தது.  இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோதே, அணியில் இடம்பெற்று ஏராளமான போட்டிகளில் ஆடியுளாளர். ஆனால், அவரால் தொடர்ந்து சிறப்பாக ரன் குவிக்க முடியாத நிலையில், தோனி கேப்டனாக பிறகு, விக்கெட் கீப்பர் இடத்தை அவர் முழுமையாக ஆக்கிரமித்துக்கொணட்ர். இதனால் பார்திவ் பட்டேலின் வாய்ப்பு பறிபோனது.

தோனி ஓய்வு பெற்ற பின் விரிதிமான் சாஹா விக்கெட் கீப்பராக இருந்தார்.  அவருக்கு மோசமான காயம் ஏற்பட்ட நிலையில், பார்திவ் பட்டேல் மீண்டும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணி நிர்வாகமோ, பல்வேறு விக்கெட் கீப்பர்களை களமிறக்கியது. இதனால், வெறுப்படைந்த பார்திப் படேல், அணியின் தலைமை மற்றும் நிர்வாகம் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். “விக்கெட் கீப்பர்களிடம் நாம் பொறுமை இன்றி நடந்து கொள்கிறோம் என நான் நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு தொடரிலும் ஆடுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.” என்றார்.

மேலும், “தானன் தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் ஆடினேன். தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் ஆடினார். ஆஸ்திரேலியாவில் கார்த்திக், சாஹா இரண்டு பேருமே இல்லை. ரிஷப் பண்ட் ஆடினார். என்னைப் பொறுத்தவரை நாம் உடையாத பொருளை ஓட்ட வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்” என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக பார்திவ் பட்டேல் அறிவித்து உள்ளார்.