சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
‘வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த மாதம் கடந்த 25ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களும் பார்வையிட்டு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிவர் புயலால் சேதமடைந்த வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.