டில்லி

கொரோனா தடுப்பூசிகள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கம் இதோ

இந்தியா கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய நிலையில் இப்போது கோவிட் -19 க்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்குவதற்கான முனைப்பில் உள்ளது.  இந்த ஆண்டின் சிறந்த மகத்தான பணியான வைரசிற்கான தடுப்பூசி உள்நாட்டு அடிப்படையில் மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புடன், கடினமான ஆராய்ச்சி மூலம் சாத்தியமாகி உள்ளது..

இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், தடுப்பூசிகளை இலக்கு குழுக்களுக்கு வழங்குவது மிகவும் சவாலான பணியாகும்.  சேமித்து வைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,  குறிப்பாக ஃபைசர் தயாரித்த தடுப்பூசி பாதுகாப்பிற்காக மிகக் குறைந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.

குறிப்பாகத் தடுப்பூசிகள் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் நம்பகமானதாகச் சேமித்து வைக்க வேண்டும்.  சுமார் 87 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரி சுக்லா பிரிட்டனில் முதன்முதலில் தடுப்பூசி பெற்றவர்ஆவார். ஏற்கனவே ஹரியானா சுகாதார அமைச்சர் அனில விஜ் சோதனை தடுப்பூசியின் முதல் டோஸ் நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே பாதுகாப்பு நெறிமுறை மற்றும் செயல்திறன் பற்றிய கேள்விகளை அதிக அளவில் எழுகிறது. மொத்தத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு எந்தவொரு பாதகமான விளைவுகளும் ஏற்பட்டதா என்பதை கவனிக்க வேண்டும். இதில் முடல் டோசை  முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு அளிக்க வேண்டும், தடுப்பூசி அளிப்பை நிர்வகிப்பது என்பது சுகாதார ஊழியர்களின் பணிச்சுமையைஅதிகரிக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்,

கொரோனா தடுப்பூசியை அளிக்க மொபைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் திட்டங்கள் உள்ளன,  தொலைதூர மற்றும் கிராமப்புறங்கள் உள்ளிட்ட இடங்களில் தொற்றுநோய்க்குப் பின்னர் உண்டான கடுமையான நிலைமைகளையா பற்றி அறிய டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவியது என்பதில் சந்தேகமில்லை, ஆயினும் தடுப்பூசி அளிப்பதில் இந்த தொழில்நுட்பம் ஒரு வசதியாளராக மட்டுமே செயல்படக்கூடும்

இதில் மனிதர்களின் நேரடி உழைப்பு அதிகமாகத் தேவைப்படும்.  தொலைப்பேசி கலந்தாய்வு என்பது நேரடியான சோதனைக்கு ஒரு மாற்று இல்லை என சுகாதார வல்லுநர்கள் நம்புகின்றனர் . இந்தியா தனது தடுப்பூசிகளின் தேர்வை விலை, சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றைப் பொறுத்து அமைக்கும். எனவே இது ஒரு முழுமையானதாக அமைய அடுத்த வருட இறுதி வரை ஆகும் என நம்பப்படுகிறது.