வாஷிங்டன்:
லகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மில்லியனை கடந்துள்ளது எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 1.5 3 மில்லியன் கடந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி: உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,009,962 மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,535,107 ஆக உள்ளது.
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த நாடு அமெரிக்கா, இங்கு மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,750,316 ஆக உள்ளது, மேலும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  2,82,236ஆக உள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இடம் பிடித்துள்ளது. இங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,644,222, மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,182ஆக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள், பிரேசில்(6,603,540), ரஷ்யா(2,439,163), பிரான்ஸ்(2,345,648), இத்தாலி(1,728,878), இங்கிலாந்து(1,727,751), ஸ்பெயின்(1,684,647), அர்ஜென்டினா(1,463,110), கொலம்பியா(1,371,103), ஜெர்மனி(1,184,845), மெக்ஸிகோ(1,168,395), போலாந்து(1,063,449) ஈரான்(1,040,547), மேலும் கொரோனா வைரசால் அதிகமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
[youtube-feed feed=1]