வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக, கருப்பினத்தைச் சேர்ந்த லாயிட் ஆஸ்டின் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி உண்மையானால், பென்டகன் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர் என்ற பெயரைப் பெறுவார்.

இவர், கடந்த 2003ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சியில், அமெரிக்கப் படைகளை, சதாம் உசேனின் ஈராக்கிற்குள் வழிநடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பணியாற்றிய அவர், முன்னணி படைப்பிரிவுகள் முதல் தளவாடக் குழுக்களை இயக்குவது, ராணுவத்தில் ஆள் சேர்ப்பை மேற்பார்வையிடுவது உள்ளிட்ட பென்டகனின் பல முக்கிய பணிகளை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்தவர்.

தற்போது 67 வயதாகும் லாயிட் ஆஸ்டின், அப்பதவியில் அமர்வாரா? இல்லையா? என்பது விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.