வாரணாசி :
உத்தரபிரதேச மாநிலத்தில் 11 மேல்சபை உறுப்பினர்களை (MLC) தேர்வு செய்ய அண்மையில் தேர்தல் நடைபெற்றது.
ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 6 எம்.எல்.சி.க்களையும், பட்டதாரிகள் தொகுதியில் இருந்து 5 பேரையும் தேர்வு செய்ய நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆளும் கட்சியான பா.ஜ. க. ஐந்து இடங்களில் வென்றுள்ளது. மூன்று இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு தொகுதி முடிவு இதுவரை வெளியாக வில்லை.
பிரதமர் மோடியின் வாரணாசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் தொகுதியிலும் பட்டதாரிகள் தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளும் பல ஆண்டுகளாக பா.ஜ.கவின் கோட்டைகளாக விளங்கி வந்த நிலையில் இரு தொகுதிகளையும் முலாயம்சிங் கட்சியிடம் பறி கொடுத்துள்ளது.
– பா. பாரதி