சென்னை: தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிரகை விஜய சாந்தி இன்று பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் விஜயசாந்தி. தமிழ் தெலுங்கு படங்களில் புகழ்பெற்றவர். அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது. சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் நுழைந்தார். முதலில் பா ஜ க வில் தன்னை இணைத்ஹ்டுக் கொண்டார். அதன் பின் அங்கிருந்து விலகி சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் சேர்ந்தார். ஆனால் தனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவில்லை என எண்ணம் கொண்டார். அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். அதிலும் வெற்றிபெறாத நிலையில், மீண்டும் அரசியலில் நுழைய திட்டமிட்ட டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி சென்று ராகுலை சந்தித்துள்ளார். அவரிடம் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அவரை காங்கிரஸ் கட்சியாக சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்து வந்த விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இது தொடர்பாக தலைமைக்கு கடிதம் எழுதிய நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். விஜயசாந்தி உடன் பா.ஜ.க., தலைவரும் மத்திய இணையமைச்சருமான கிஷன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது விஜயசாந்தியும் பாஜகவில் இணைவது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.